இந்த சந்தேகநபர் 13.12.2024 அன்று கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது ரி-56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு குற்றப்பிரிவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

