துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பிடியாணை

75 0

வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் குமாரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை பதில் நீதிவான் சட்டத்தரணி உபாலி ரணசிங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி  மாத்தறை, பெலேன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் முன்னால் நடத்தப்பட்ட  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலேயே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளை கருத்தில் கொண்டே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பொலிஸ்  மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி அன்செல்ம் டி சில்வா உட்பட எட்டு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.