போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

86 0

நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் புதன்கிழமை (05) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

வைத்தியர்களின் கொடுப்பனவுகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக அரச வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  மேலும் தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்திசாலைகளில் சிகிச்சைபெற்றுவரும் நோயாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.