ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு ரொஷானின்” மனைவிக்கு ஆயுள்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் விஜேசிங்க ஆராச்சிலாகே நிரோஷா என்று அழைக்கப்படும் 36 வயதுடைய குடு ரொஷானின் மனைவி ஆவார்.
2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “குடு ரொஷானின்” மனைவி 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் “குடு ரொஷானின்” மனைவிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வந்தது.
இந்நிலையில், “குடு ரொஷானின்” மனைவிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் போதுமானதாக இருந்ததால் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

