அநுராதபுரத்தில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

90 0

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்ராவஸ்திபுரம் பகுதியில் உள்ள ரயில் மார்க்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) காலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரம் , ஸ்ராவஸ்திபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.