அநுராதபுரம் – மரதன்கடவல பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது

85 0

அநுராதபுரம் மரதன்கடவல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருட்களை வைத்திருந்த  சந்தேகநபர் ஒருவரை மரதன்கடவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  நேற்று சனிக்கிழமை (01) சந்தேகநபர் மரதன்கடவல வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 15 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளினை மரதன்கடவல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 51 வயதுடைய கல்கிஸ்சை பகுதியை சேர்ந்தவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.