மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லவான பகுதியில் முதியவரை வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் மாத்தளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லவான பகுதியில் 73 வயது முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய தோடம்கஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஹாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

