கனடா, சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு பெப்ரவரி மாதம் அமலுக்கு வருவதாக அறிவித்திருந்த நிலையில், மேலும் ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மார்ச் 4 ஆம் திகதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்

