மறு அறிவித்தல் வரை யால தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை

84 0

மழை குறையும் வரை யால தேசிய பூங்கா இன்று சனிக்கிழமை (01) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என யால தேசிய பூங்காவின் பராமரிப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த அடை மழை காரணமாக யால தேசிய பூங்காவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பூங்காவில் உள்ள சில ஏரிகளின் கரைகள் உடைந்துள்ளன.

இதனால் வன விலங்குகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பூங்காவை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இதன்படி யால வலய இலக்கம் 1க்கு உட்பட்ட கடகமுவ மற்றும் பலடுபான
ஆகிய நுழைவு வாயில்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும்,எவ்வித முன்அறிவிப்பும் இன்றி எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தால், கட்டணம் செலுத்திய சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக யால சபாரி ஜீப் வாகன சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயசிங்க தெரிவித்தார்.