இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இருவர் கைது

100 0

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குருந்துவத்த மற்றும் புபுரஸ்ஸ ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் இலங்கை இராணுவத்தின் பொலிஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.