கெக்கிராவ – தலாவ வீதியில் எப்பாவல பிரதேசத்திற்கு அருகில் மரத்தில் மோதி லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, புதன்கிழமை (26) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதுடன் லொறியின் முற்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.


