மஹேன மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றல்

72 0

கம்பஹா மஹேன பிரதேசத்தில் உள்ள மயானத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஊடாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கியுடன் 22 தோட்டாக்கள் மற்றும் மகசீன் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த துப்பாக்கியின் உரிமையாளரும் மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.