பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

70 0

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் அம்பலாங்கொடை ,தொட்டவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்துகெதர பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாகவும், அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற 13 திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

பல்வேறு பிரதேசங்களில் வைத்து திருடப்பட்டதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.