பிரதான வீதியோரத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உயிர் கோழிகளை இறைச்சிக்காக வெட்டி துப்புரவு செய்து கொண்டிருந்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன்- டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
ஹட்டன் -டிக்கோயா தரவளை பிரதான வீதியில் கோழிகள், இறைச்சிக்காக வெட்டி துப்புரவு செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக அவ்விடத்திலிருந்து கோழிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
பொது இடத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியமைக்கு எதிராக வழக்கு பதிவு செய்து எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் ஹட்டன்- டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

