காயமடைந்தவர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே”வின் நெருங்கிய நண்பரா?

70 0

கம்பஹா, மினுவாங்கொடை , பத்தன்டுவன பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பத்தன்டுவன பிரதேசத்திற்கு சென்ற இனந்தெரியாத நபரொருவர், முச்சக்கரவண்டியில் இருந்த 36 வயதுடைய நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே”என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரின்  நெருங்கிய நண்பன் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.