ஜேர்மனியின் அரசியல் கட்சியின் தலைவரான பெண்ணின் காதலி சுவிட்சர்லாந்து பெண்

110 0
ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ள கட்சியின் தலைவரான பெண்மணிக்கும் இலங்கையில் பிறந்து சுவிட்சர்லாந்தில் தத்தெடுக்கப்பட்ட பெண்ணிற்கும் உள்ள ஒருபாலின உறவு உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

இது குறித்து சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

ஜேர்மனியில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதிதீவிர வலதுசாரி கட்சி கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு அடுத்ததாக அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளது.

தீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு  கட்சி வெற்றிபெற்றிருந்தால், அதன் தலைவர் அலைஸ் வெய்டெல் வெற்றிபெற்றிருந்தால் அவர் ஜேர்மனியின் முதலாவது லெஸ்பியன் சான்சிலாராகியிருப்பார்.

ஆண் – பெண் உறவை அடிப்படையாக கொண்ட குடும்ப அமைப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும்  பாரம்பரிய குடும்ப அமைப்பிற்காக குரல்கொடுக்கும் கட்சியின் தலைவர் ஒரு லெஸ்பியன்.

வெய்டெல் 2009 முதல் சரா பொசார்ட் என்பவருடன் உறவில் உள்ளார்.

சராபொசார்ட் இலங்கையில் பிறந்து சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்களால் தத்தெடுக்கப்பட்டவர்.