முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 50ஆயிரத்து 600 மில்லிலீற்றர் கோடாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் 24வயதுடைய முத்தையங்கட்டு இடதுகரையை சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றில் முற்படுத்தப்பட பின்னர் பிணை வழங்கப்பட்டதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

