நீரில் மூழ்கி ஜோர்தான் பெண் பிரஜை ஒருவர் உயிரிழப்பு

112 0

பெந்தோட்டை கடற்கரையில் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த ஜோர்தானைச் சேர்ந்த பெண் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காலி பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் சனிக்கிழமை (22) அன்று பிற்பகல் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் பிரஜை ஒருவர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதன்போது விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் நீரில் மூழ்கியவரை மீட்டு பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வருகைத் தந்திருந்த 25 வயதுடைய ஜோர்தானைச் சேர்ந்த பெண் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் பிரேத பரிசோதனைக்காக சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் சவசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.