சஞ்சீவ விவகாரம்: இருவருக்கு 90 நாட்கள் தடுப்பு

92 0

குற்றவியல் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை, புதுக்கடை இலக்கம் 5  நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக் கொன்ற முன்னாள் கமாண்டோ சிப்பாய் மற்றும் அவரது ஓட்டுநரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு குற்றப்பிரிவுக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (24) அனுமதி வழங்கினார்.

சந்தேக நபர்கள் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும், மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தல்களின்படி 90  நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.  கொழும்பு குற்றப்பிரிவு சமர்ப்பித்ததை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு போலி வழக்கறிஞராக வந்த பெண்ணை  தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களையும் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கணேமுல்ல சஞ்சீவாவின் கொலை தொடர்பான சாட்சியங்களின் பிரேத பரிசோதனை நீதவான் முன்னிலையில், திங்கட்கிழமை (24) காலை  நடைபெற்றது, அதைத் தொடர்ந்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.