நரம்பியல் சத்திர சிகிச்சை முதுகலைப் பட்டப்படிப்பை தொடரும் இளம் மருத்துவர்களை ஊக்குவிக்க சுகாதார அமைச்சு கவனம்

104 0
நரம்பியல் சத்திர சிகிச்சை முதுகலைப் பட்டப்படிப்பை தொடர எதிர்பார்த்துள்ள இளம் மருத்துவர்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி உள்ளது. ஆகையால் வைத்தியர்கள் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான ஆதரவையும், அனைத்து வளங்களையும் சுகாதார அமைச்சு தொடர்ச்சியாக வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்த கல்வி அமர்வு மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நரம்பியல் சத்திர சிகிச்சை முதுகலைப் பட்டப் டிப்பை தொடர எதிர்பார்த்துள்ள இளம் மருத்துவர்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் சுகாதார அமைச்சு தற்போது கவனம் செலுத்தியுள்ளது. ஆகையால் வைத்தியர்கள் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான ஆதரவையும், அனைத்து வளங்களையும் சுகாதார அமைச்சு தொடர்ச்சியாக வழங்க எதிர்பார்த்துள்ளது.

இந்நாட்டு மக்களுக்கு தரமான மற்றும் உரிய சிகிச்சை சேவைகளை வழங்கி வரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்க விடயமாகும்.

அரச மற்றும் தனியார் என்னும் இரு தரப்பையும் சேர்ந்த நரம்பியல் நோய்கள் சார்ந்த 27 வைத்திய நிபுணர்கள் தற்போது நாட்டில் உள்ளனர். வரும் காலங்களில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம்.

பொதுமக்களுக்கு உயர்தரமான நரம்பியல் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்க அவசியமான எதிர்கால திட்டம் ஒழுங்கமைக்கப்பட உள்ளது.

தற்போது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளது. நரம்பியல் அறுவை சிகிச்சை சேவைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தானும் சுகாதார அமைச்சும் உறுதி பூண்டுள்ளோம்.

இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறையின் அபிசவிருத்திக்காக பொருளமாவான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்யுடுள்ளது. நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம், இலங்கையின் நரம்பியல் துறையின் தரத்தை வலுப்படுத்த முன்னின்று உழைக்கும் ஓர் நிறுவனமாகும்.

இதுபோன்ற வருடாந்த கல்வி அமர்வு மாநாடுகள் சர்வதேச நரம்பியல் நிபுணர்களிடையேயான ஒத்துழைப்பையும் தோழமையையும் ஊக்குவிப்பதுடண், அறிவுப் பரிமாற்றத்தையும் எளிதாக்குகின்றன என்றார்.