அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றைய சந்தேக நபர், நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்ற பிரதான சந்தேக நபரின் போக்குவரத்துக்கு உதவி செய்த சாரதி ஒருவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை (22) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

