அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத அவமதிக்கும் வார்த்தைகளை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறித்து வெள்ளை மாளிகை ஏமாற்றமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆதரவிற்கான இழப்பீடாக அல்லது பரஸ்பர உதவிக்காக உக்ரைன் தனது அரிய கனிமங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்கள் உக்ரைனிற்கு மிகச்சிறந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கினோம்,என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அரிய கனிமங்களை தன்னுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என விடுத்த வேண்டுகோள்களை உக்ரைன் ஜனாதிபதி ஏற்கனவே நிராகரி;த்துள்ளார் எனது தேசம் விற்பனைக்கில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள அபூர்வமானகனிமங்களான லித்தியம் மற்றும் டைட்டானியத்தின் ஒரு பகுதியை அமெரிக்க ஜனாதிபதி கோரியுள்ளரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அந்த கனியவளங்களின் 50 வீதத்தின் உரிமையை அமெரிக்கா கோரியதாலும் எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காததாலும் தான் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நான் உக்ரைனை பாதுகாக்கின்றேன் என்னால் அதனை விற்க முடியாது,எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது என வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஸ்யாவை சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகள் மூலம் அமெரிக்கா மீண்டும் சர்வதேச அரங்கிற்கு கொண்டுவந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா உதவியை குறைத்தால் ஐரோப்பா என்ன ஆதரவை வழங்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவிற்கு பரந்துபட்ட விட்டுக்கொடுப்புகளை செய்வது குறித்த யோசனைகளை நிராகரித்துள்ள அவர் இந்த யோசனையை உக்ரைன் மக்கள் நிராகரிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்

