உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க விசேட பிரதிநிதி இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடு இறுதிநிமிடத்தில் இரத்து

106 0

மூன்று வருடகால ரஸ்ய உக்ரைன் யுத்தத்தை எவ்வாறு முடிவிற்கொண்டுவருவது என்பது குறித்த அரசியல் பதற்றம் தீவிரமடைகின்ற அதேவேளை அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் உக்ரைன்ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இடம்பெறவிருந்த செய்தியாளர் மாநாடு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட பிரதிநிதி கெய்தகெலொக்கும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடே இரத்துசெய்யப்பட்டுள்ளது.

இறுதியில் இருவரும் இணைந்து புகைப்படம் மாத்திரம் எடுத்துக்கொண்டனர்.

அவர்கள் அறிக்கைகளை வெளியிடவில்லை கேள்விகளிற்கு பதில் அளிக்கவில்லை.

அமெரிக்க தரப்பினரே செய்தியாளர் மாநாட்டினை இரத்துச்செய்யுமாறு கேட்டனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உக்ரைனின் கனிமங்களை  அமெரிக்கா பயன்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் மீண்டும் ஈடுபடவேண்டு;ம் என வேண்டுகோள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத அவமதிக்கும் வார்த்தைகளை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறித்து வெள்ளை மாளிகை ஏமாற்றமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆதரவிற்கான இழப்பீடாக அல்லது பரஸ்பர உதவிக்காக உக்ரைன் தனது அரிய கனிமங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் உக்ரைனிற்கு மிகச்சிறந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கினோம்,என அவர் தெரிவித்துள்ளார்.