பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்

81 0
ஹங்வெல்ல – கிரிந்திவெல வீதியில் பூகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.