அளுத்கடை நீதவான் நீதிமன்றக் கூண்டில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவவின் இதயத்தை ஊடுருவிச் சென்று அவரது உடலில் நுழைந்த ஒரு தோட்டாவின் துண்டு, இன்று (20) திறந்த நீதிமன்றத்தில் அரசாங்க பகுப்பாய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சஞ்சீவா நின்றுக்கொண்டிருந்த கூண்டில் இருந்த மரக் கம்பத்தில் ஒரு துளை தோண்டிய பொலிஸ் அதிகாரிகள், அதில் ஒன்றரை அங்குலம் ஆழமாகப் பதிந்திருந்த தோட்டா துண்டை மீட்டெடுத்து, மேலதிக விசாரணைக்காக
அரசாங்க பகுப்பாய்வாளர்கள் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்

