முகமாலை வடக்கு A-9 வீதியோரத்தில் உள்ள கடை ஒன்று மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் நேற்று புதன்கிழமை (19) நள்ளிரவு 12.30 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த கடை மீது 2020ஆண்டில் கழிவு எண்ணெய் வீசப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இரும்புக்கம்பியை பயன்படுத்தி கடையின் சொத்துக்களை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த கடை மீத நேற்றைய தினம் மூன்றாவது தடவையாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




