சட்டவிரோதமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட அறுவர் படகுகள் வலைகளுடன் கைது

156 0
வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில்  படகு, வலைகள், கூட்டு வலைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதை தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு நபர்களை கைது செய்து,  சிறுவர்கள் என்பதால் இருவரை பிணையில் விடுவித்துடன் ஏனைய நால்வரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்வள திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், முல்லைத்தீவு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும், வட்டுவாகல் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினரும், செல்வபுரம் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தும்  நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.