வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான சொகுசு கார்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் 30க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்துருகிரிய, கல்வருசாவ வீதி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபர், வாகன வாடகை சேவை நிலையங்களுக்குச் சென்று வாடகை அடிப்படையில் கார்களை பெற்றுக்கொண்டு, பின்னர் அதனை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

