சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்து மற்றவர்களுக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வாறு விற்கப்பட்ட 30 வாகனங்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், வாடகைக்கு வாகனங்களை வழங்கும் சேவைகளை அணுகி, போலி நிறுவனத்தின் பெயரில் ஆவணங்களை வழங்கி சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளார்.
அத்துடன், தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலைக்கு அந்த வாகனங்களை மற்றவர்களுக்கு விற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் அதுருகிரிய பகுதியில் வசிப்பவர் என்றும், அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சொகுசு வாகனங்களை நிறுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த நபர், ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள வாகனத்தை ரூ. 20 மில்லியனுக்கு விற்பனை செய்து வாகன உரிமை ஆவணங்கள் விற்பனைக்குப் பிறகு சில நாட்களில் ஒப்படைக்கப்படும் என்று கூறி தனிநபர்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

