வெளிப்படையாக கருத்துதெரிவிப்பவரும் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பியவருமான சல்மான் ருஸ்டி கருத்து சுதந்திரம் தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றதா என்ற கேள்விக்கு எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு பதில் அதற்கு ஊறு விளைவிக்கின்றார் என சல்மான் ருஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார்.
தீவிரவலதுசாரிகளிற்கு சார்பாக கருத்துருவாக்கத்தில் மஸ்க் ஈடுபட்டுள்ளார் என சல்மான் ருஸ்டி கருத்துசுதந்திரத்திற்கு எதிராக செயற்பட்டுக்கொண்டே எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதாக தெரிவிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
மஸ்க் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை,அவரது சமூக வலையமைப்பு தீவிரவலதுசாரிகளிற்கு ஆதரவான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகி;ன்றது,என தெரிவித்துள்ள சல்மான் ருஸ்டி கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் உன்னதமான பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துக்கொண்டே அதற்கு எதிராக செயற்படுவது நேர்மையற்ற விடயம், செவ்வாய்கிரகத்திற்கு செல்லும் முதல்மனிதனாக எலான் மஸ்க் விளங்கவேண்டும் என நான் விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

