சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி மானியம்’

81 0

ஜூலை மாதம் முதல் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி மானியத்திற்காக நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்தார்.

ஏற்றுமதி மூலம் 19 பில்லியின் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்

இந்த ஆண்டில் 2.3 வீத முதன்மை கணக்கில் உபரியை அடைய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை  போல் அல்லாமல் இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் முற்றிலும் மாறுபட்டது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நிதி ஒதுக்கப்படாத உண்மையில் தேவையாக உள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு இந்த வரவு செலவு திட்டம்  தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை முக்கியத்துவம் அளிக்கப்படாத துறைகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மக்களுடைய பணத்தை வீண் விரயம் செய்யாமல் அதனைக் கொண்டு பிரதிபலன் அடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களை பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்லும் வகையில் இந்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர வணிகம்,ஏற்றுமதி பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்குவோம் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்