உடல்நலப்பாதிப்பு – பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

85 0

உடல்நலப்பாதிப்பு காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பாதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த 88 வயது பாப்பரசர் தனது உரைகளை வாசிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார்.

இன்று காலை ஆராதனைக்கு பின்னர் பரிசுத்த பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.