தீவிரமாகிறது எல்ல மலை தீ

66 0

எல்ல சுற்றுலா நகருக்கு அருகில் உள்ள எல்ல மலையில் ஏற்பட்ட தீ மேலும் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், வன பாதுகாப்பு அலுவலகம் நோக்கி பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (13) மதியம் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு பிரிவு, இராணுவம், பொலிஸார், வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ பரவலால், எல்ல மலை சுமார் 15 ஏக்கர் தீயில் நாசமாகியுள்ளது.

இதேவேளை, ஹொரணை, பொரலுகொட கைத்தொழில் பேட்டையில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ இன்று அதிகாலை 02:30 அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது