மீண்டும் மின்சாரம் தடைபடுவதை தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
தேவை அதிகரிக்கும் போது ஞாயிற்றுக்கிழமையும் மீண்டும் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் அதேவேளையில், எந்த நேரத்திலும் மின்தடை ஏற்படலாம். இது குறித்து மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரை சபையில் அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும், பிரேமதாச கூறினார்.
இதற்கு பதிலளித்த சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, இலங்கை மின்சார சபையோ அல்லது அமைச்சரோ இந்த விடயம் தொடர்பில் விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள் என்றார்

