பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டி பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிராந்தியாவத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் குறித்த சீன நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 300,018 மில்லி லீற்றர் எத்தனோல் மற்றும் 67,5000மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் கொழும்பு தாமரை கோபுர திட்டத்தில் பொறியாளராக பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

