இளைஞன் மரணம் – நான்கு கான்ஸ்டபிள்கள் கைது

77 0

வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த நபர் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் நான்கு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் இன்று (12) மாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக இந்த நான்கு பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நான்கு கான்ஸ்டபிள்களும் நாளை (13) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாத்துவை தல்பிட்டியவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை(24 வயது) உயிரிழந்தார்