சட்டமா அதிபர் திணைக்களம் ரத்து செய்யப்படுமா

95 0

முன்மொழியப்பட்ட சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம் நிறுவப்படுவதால், சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதவி ரத்து செய்யப்படாது என்று அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம், சட்டமா அதிபர் அலுவலகத்தை விட அதிக திறனுடன் செயல்படும் என்று தெரிவித்தார்.

இந்தப் புதிய அமைப்பு மக்களுக்கு அதிக திறனுடன் நீதி வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

“சமீபத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொண்டது போன்ற எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இவ் அமைப்பில் இருக்காது” என்று அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் ஒரு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை நிறுவ முடிவு செய்துள்ளதையடுத்து அமைச்சர் இவ்வாறு கூறினார்.