தையிட்டி விகாரை தொடர்பில் அரசு தீர்மானம் எடுக்கவில்லை

164 0

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள பௌத்த விகாரை தொடர்பாக அரசாங்கத்தில் எவ்விதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்ற வலியுறுத்திப் செவ்வாய்க்கிழமை (11) முதல் அங்குப் பாரிய போராட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விகாரையை அகற்ற முடியாது எனவும், மாறாக விகாரைக் காணியின் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் புத்த சாசன அமைச்சர் கூறியதாகப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக அமைச்சர்  கூறியதாவது,  அதனை நிராகரித்த அவர், அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது தன்மிடம் இந்த விடயத்தைப் பற்றிக் கூறியிருந்தார்கள்.

இதுவொரு பாரதூரமான விடயம் என்பதால், சகல தரப்பினரையும் இணைத்துக் கலந்துரையாட வேண்டும் என தீர்மானித்திருந்த போதிலும் அரசாங்க மட்டத்தில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்