பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் தம்பதெனிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டதெனியாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டதெனியாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாரம்மல, கிரியுல்ல மற்றும் கொட்டதெனியாவ ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் இணைந்து பல்வேறு பிரதேசங்களில் திருடியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, மற்றைய சந்தேக நபரை கைது செய்வது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

