தையிட்டியில் இன்று ஆர்ப்பாட்டம்

102 0

யாழ். தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று (11) போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான 14 ஏக்கர் காணியையும் காணி உரிமையாளர்களிடம் மீளக்  கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் சுமார் ஒரு வருட காலத்துக்கு மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை, நாளை புதன்கிழமை ஆகிய இரண்டு  நாட்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.