மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது !

112 0

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வவுனியா முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து 400 சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைதானவர் மேலதிக விசாரணைகளுக்காக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.