முந்தல் பகுதியில் குளத்தில் வீழ்ந்து ஒருவர் பலி !

97 0

முந்தல் கருங்காலிச்சோலை பகுதியில், குளத்தில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் முந்தலம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

மேலும், இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.