ரணில் – சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை ; நளிந்தவின் பெயர் பட்டியலால் சிக்கல்

120 0

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மற்றும் எதிர்கால அரசியலில் இணைந்து பயணிக்கும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் இப்பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், தற்போது அவற்றில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வியாழனன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பெயர் பட்டியலே இந்த சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் போது அப்போதைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களென பலரது வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

இதனை அடிப்படையாகக் கொண்டு 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி ரூபாவை இழப்பீடாகப் பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பெயர் பட்டியலொன்றை பாராளுமன்றத்தில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.