அந்தவகையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, சிறு பொதியில் இருந்த ஒரு கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர், மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

