வீட்டுக்குள் நாய்கள் நுழைவதைத் தடுக்க, சட்டவிரோதமாக தந்தை பொருத்தியிருந்த மின்சார வயரில் மகன் மாட்டிக் கொண்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக, செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.
நெலும்வெவ – சமகிபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தாயார் தனியாக இருந்தபோது, அவருக்கு உணவு வழங்குவதற்காக அவரது வீட்டுக்கு சென்றபோதே, மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்

