கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை மீட்பு

85 0

அஹுங்கல்ல கடலில் நீராடச் சென்ற  வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

38 வயதான ரஷ்ய பிரஜையே மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்பு படையினர்  விரைந்து செயற்பட்டு குறித்த நபரை காப்பாற்றியுள்ளனர்.