கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

75 0
மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, கொழும்பு, ஓல்காட் மாவத்தையில் உள்ள கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் மற்றும் துணைப் பாதைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.