கொஸ்கொட பொலிஸ் பிரிவின் வதுரவெல பகுதியில் நேற்று புதன்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள், துப்பாகி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 05 கிராம் 340 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, 09 தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசின் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், கடந்த 30ஆம் திகதியன்று கொஸ்கொட பொலிஸ் பிரிவில் ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்ற வழக்குடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் வருகின்றனர்.

