எஹலியகொடை கொலைச் சம்பவம் ; இரண்டு சந்தேகநபர்கள் கைது

90 0

இரத்தினபுரி, எஹலியகொடை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஹொரகொட பகுதியில்  கடந்த 17 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரைக் கொலை செய்து இருவரைப் பலத்த காயங்களுக்குள்ளாக்கிய  சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள்  நேற்று புதன்கிழமை (05) எஹலியகொடை பொலிஸ்  நிலையத்தில் ஆஜரான பின்னரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 மற்றும் 33 வயதுடைய எஹலியகொடை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எஹலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.