ஸ்வீடனில் கல்வி நிலையத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

139 0
ஸ்வீடனில் உள்ள ஒரு கல்வி மையத்தில் ஒரு பயங்கரமான துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று ஸ்வீடன் காவல்துறை வலைத்தளம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

காயமடைந்தவர்கள் மாணவர்களா அல்லது ஆசிரியர்களா என்பது இன்னும் வெளியாகவில்லை.

“துப்பாக்கியைத் தவிர” எந்த வகையான ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்று நாட்டின் பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு ஒரு பயங்கரவாதச் செயலாக சந்தேகிக்கப்படவில்லை என்றும், கொலை, தீ வைப்பு மற்றும் மோசமான ஆயுதக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.